Thursday, December 23, 2010

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்!



பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T) அழுத்துங் கள். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும். பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக் காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக் காட்டும்.

எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும்.

எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும்.
Ctrl+ ‘+’ அல்லது ‘’ அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின் அளவு கூடும், குறையும்.
.Com என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl +Enter அழுத்தினால் போதும்.
.net என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும்.
.org என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து Ctrl + Shift + Enter அழுத்தவும்.
ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும்.
Ctrl + D அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும்.
Ctrl + I அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும்.
Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும்.
Ctrl + N கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும்.
Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.
Ctrl + T புதிய டேப் ஒன்றைத் திறக்கும்.
Ctrl + F4 அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.
திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம்.
ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.

இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும். அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப், புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்.

நன்றி : த.கிருஷ்ணகுமார்

Wednesday, December 22, 2010

What is Cloud Computing??

Cloud computing is a general term for anything that involves delivering hosted services over the Internet. These services are broadly divided into three categories: Infrastructure-as-a-Service (IaaS), Platform-as-a-Service (PaaS) and Software-as-a-Service (SaaS). The name cloud computing was inspired by the cloud symbol that's often used to represent the Internet in flowcharts and diagrams.
Cloud computing means that instead of all the computer hardware and software you're using sitting on your desktop, or somewhere inside your company's network, it's provided for you as a service by another company and accessed over the Internet, usually in a completely seamless way. Exactly where the hardware and software is located and how it all works doesn't matter to you, the user—it's just somewhere up in the nebulous "cloud" that the Internet represents.



CLOUD COMPUTING (மேகக் கணினியம்)

மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்யுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.

       SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது.

      விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.
       ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால்  போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. 

    நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து  அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். 

       SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

      CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில்  Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். 

இணையக் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க




குழந்தைகள் நடைபழகும் முன்னே, மழலையர் பள்ளி ( Nursery / Montessori ) போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில், இந்தப் பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டி இன்னும் அதிகமாகும் வாய்ப்புத்தான் காணமுடிகிறது. இதே போக்கின் அடிப்படையில், பள்ளியில் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே, பிள்ளைகளுக்குக் கணிணிப் பிரயோகம் பற்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

விளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள். தானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் " என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.

எவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் " பத்திரமாக போப்பா, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்" என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.


பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.




விதிமுறைகளும் வரைமுறைகளும்.:-

5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ ( Online chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.

நிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.
உங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.

உங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.


எல்லோருக்கும் பொது

:- கணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து-போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.


பேசுங்கள் – பழகுங்கள் :-

உங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். " என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்" போன்ற கேள்விகளைத் தவிர்த்து " இதை நான் படித்தேன், நீ படித்தாயா?... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா? " மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.


நில் - கவனி – செல் :-

சாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.


சந்தேகங்கள் கேட்கப் பயப்படவேண்டாம் :-

சில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் 5 – 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் அதிகமாக கணிணி / இணையம் பயன்படுத்தாதீர்கள்? அப்படி என்றால் இங்கே சொல்லியிருக்கும் முறைகளை உங்கள் வீட்டில் அமல்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் பயம் விலகும், பிள்ளைகளுக்கும் உங்கள் மேல் மரியாதை உண்டாகும்.

- தீபா கோவிந்த்

நன்றி : முத்துமணி.com

நம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்


சில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் ( PDF ) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக ( Word document ) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற்ற நினைப்போம். இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.

இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. கணிணியில் பல இடங்களிலிருந்தும் பல வகைகளில் இருக்கும் கோப்புகளை விரைவான வேகத்தில் இது வேண்டிய வகைக்கு மாற்றித் தருகிறது. ( Document converting)

இந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு ( Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder ) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்குகளில் மட்டுமே செயல்படும்.

தரவிறக்கம் (
டவுன்லோடு) செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

- பொன்மலர்

நன்றி: தகவல் தொழில் நுட்ப செய்திகள் by பிரஷா.